Menu

ஒன்ராறியோவில் புதிய அரசாங்கத்தின் வர்த்தக அமைப்பில் அதிரடி மாற்றம்..!!!

ஒன்ராறியோவில் இந்த ஆண்டு பாடசாலைகளின் திருத்தப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதியினை புதிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

புதிய முதலமைச்சராக பதவியேற்ற ஒன்ராறியோவின் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் போர்ட் தேர்தல் பிரச்சாரத்தின் போது வர்த்தக அமைப்பில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தமையின் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரொறன்ரோ பாடசாலையின் பழுதுகளை மீண்டும் சரி செய்வதற்கு 4 பில்லியன் டொலர்களை அறிவித்திருந்த நிலையில், குறித்த அறிவிப்பானது ஏமாற்றம் தருவதாக ரொறன்ரோ பாடசாலைகள் வாரியத் தலைவர் றோபின் பில்கி கவலை வெளியிட்டள்ளார்.

அத்துடன் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு 15 பில்லியன் டொலர் அளவிலான நிதி தேவைப்படுவதாக தெரிவித்த றோபின் பில்கி
இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon