Menu

ஸ்பெயின் கால்ப்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்

ஸ்பெயின் கால்ப்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக் முன்னாள் வீரர் லூயின் என்றிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜூலென் லோப்டெகு, உலக கிண்ண கால்பந்து போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில், ரியல் மாட்ரிட் கழக பயிற்சியாளர் பொறுப்புக்கு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

 

இதனை அறிந்த ஸ்பெயின் கால்பந்து சங்கம் ஜூலென் லோப்டெகுவை அதிரடியாக நீக்கியது.

 

உடனடியாக ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டின் முன்னாள் வீரர் பெர்னாண்டோ ஹியரோ நியமிக்கப்பட்டார்.

 

உலக கிண்ண போட்டியில், முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி 2-வது சுற்றில் ரஷியாவிடம் பெனால்டி ஷூட்-அவுட்டில் தோல்வி கண்டு வெளியேறியது.

 

இதனை அடுத்து பெர்னாண்டோ ஹியரோ நேற்று முன்தினம் தனது பதவியில் இருந்து விலகினார்.

 

இந்த நிலையில் ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்பெயின், நாட்டை சேர்ந்த முன்னாள் வீரரான 48 வயது லூயிஸ் என்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த தகவலை ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.

 

லூயிஸ் என்ரிக்ஸ் 2 ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன். லூயிஸ் என்ரிக்ஸ் பார்சிலோனா அணியின் முன்னாள் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon