Menu

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தெற்கு வீரபாண்டியபுரம் ககிராம மக்கள் மற்றும் லொறி உரிமையாளர்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் நேற்று ஆட்சியர் அலுவலகம் சென்று மனுக் கையளித்துள்ளனர்.

 

தமது பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது என்றும், ஸ்டெர்லைட் ஆலை சார்பில், எங்கள் பகுதியில் பல்வேறு சமுதாய பணிகள் செய்யப்பட்டதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

தற்போது, ஆலை மூடப்பட்டுள்ளதால்; கிராம மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளமையால்,ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon