Menu

அமெரிக்க ஜனாதிபதியின் கார் சாரதிக்கு சம்பளம் வழங்கப்படவில்லை

பணியின் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது அவரது கார் சாரதி முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கார் சாரதியாக நோயல் சின்ட்ரன் பணி புரிந்துள்ளார்.

 

இவர் கடந்த 25 ஆண்டுகளாக டிரம்பின் கார் சாரதியாக பணியாற்றிவருகின்றார்.
டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் வர்த்தக நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் நோயல் சின்ட்ரன் சாரதியாக பணியாற்றிவந்தார்.

 

இந்த நிலையில் நோயல் சின்ட்ரன் டிரம்ப் நிறுவனத்தின் மீது நீதிமன்றில்; வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அதில், கடந்த 6 ஆண்டுகளாக டிரம்ப் மற்றும் அவரது நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 300 மணி நேரம் மேலதிக பணிபுரிந்தமைக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே மணிக்கு 32 ஆயிரம் அமெரிக்க டொலர் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சாரதி வழங்கு தொடரந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டது.

 

இதற்கிடையே சாரதி நோயல் சின்ட்ரனின் குற்றச்சாட்டை டிரம்ப் நிறுவனம் மறுத்துள்ளதுடன், அவருக்கு உரிய சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon