Menu

விம்பிள்டன் டென்னிஸில் நடால் காலிறுதிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

 

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

 

உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2 முறை பட்டம் வென்றவருமான ஸ்பெயின் வீரர்ரபெல் நடால் 4-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த வெஸ்லியை எதிர் கொண்டார்.

 

இதில் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

 

நடால், 6-வது முறையாக கால் இறுதியில் நுழைந்துள்ளதுடன், விம்பிள்டனில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நடால், இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

 

நடால் கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் அர்ஜென்டின வீரர் டெல் போட்ரோ அல்லது ஷிமோனை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Right Menu Icon