Menu

ரஜினியின் ‘2.0’ நவம்பர் இறுதியில் வெளியீடு

ரஜினி நடிப்பில் ஷங்கர் ‘2.0’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாகவும், அக்ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே ரிலீஸான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

‘எந்திரன்’ என்ற தலைப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்க மறுத்ததால், ‘2.0’ என இரண்டாம் பாகத்துக்குத் தலைப்பு வைத்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்துள்ளார்.

தமிழ் மற்றும் இந்தியில், 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் ஜெயமோகனும், இந்தியில் அப்பாஸ் டயர்வாலாவும் வசனம் எழுதியுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட போதும், கிரபிக் பணிகள் முடிவடையாமையால், ‘2.0’வுக்குப் பதிலாக ‘காலா’வை முதலில் வெளியிட்டனர்.

இந்நிலையில், விரைவில் பணிகளை முடித்துத் வழங்க கிராபிக்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், எனவே நவம்பர் 29 ஆம் திகதி தேதி 2.0 வெளியிடப்படும் என ட்விட்டரில் ஷங்கர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்;.

விஸ்வாசம் படகுழுவின் புதிய அறிவிப்பு….?

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும்...

Leave a Reply

Right Menu Icon