Menu

தேர்தலுக்கு ஐயாயிரம் கோடியா?

பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 5 ஆயிரம் கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்படும் போது மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. கரிசனை கொண்டுள்ளது.

 

இது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டது.

 

அப்போது 4 கட்சிகள் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், 11 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

 

இந்த நிலையில் சட்ட ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் வழங்கிய பதிலில், பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு என்னசெய்யவேண்டும் மற்றும் செலவு போன்ற போன்ற விபரங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

குறிப்பாக வாக்குப் பதிவு நடத்த ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 மடங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

வாக்குச் சாவடி அதிகாரிகள், ஊழியர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்க கால அவகாசம் தேவைப்படும் என்றும் அதற்கும் கணிசமான தொகை செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கூடுதலாக மின்னணு இயந்திரங்களை மட்டும் கொள்வனவு செய்வதற்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம்; சுட்டிக்காட்டியுள்ளது.

 

அத்துடன், 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கூடுதலாக 12 லட்சம் வாக்குச்சாவடிகள், மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 14 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon