Menu

வடக்கின் சட்டம் ஒழுங்கில் மத்தியஅரசு கரிசனை

வடக்கின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்ந்து, நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் சார்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

 

அதற்கமைய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதியமைச்சர் நளின் பண்டார ஜயமஹா, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

 

வடக்கில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஆராயும் வகையிலும், வடக்கு மக்களின் புலிகளுக்கு ஆதரவான மனநிலையை மாற்றும் நோக்கிலும் தாம் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறெனினும் மக்கள் மனங்களில் இந்த எண்ணங்களை மாற்றுவது எளிதான விடயம் அல்ல என்ற போதிலும், அதனை எவ்வாறாயினும் நிறைவேற்றவுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விடுதலை புலிகள் மீண்டும் தலைத்தூக்க இடமளிக்கமுடியாது என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகின்றமையால், அங்கு புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஆகியோர் செயல்பாட்டில் உள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

குறித்த விஜயத்தின்போது அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், வடக்கின் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியவுள்ளனர்.

 

இதேவேளை, வறுமையில் உள்ள தமிழ்ப் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸாரின் உதவியுடன் பலாலியில் அமைக்கப்பட்ட வீடுகளையும் அமைச்சர் இதன்போது திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு !!

நடிகர் சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி...

Leave a Reply