Menu

இங்கிலாந்தின் 5 தசாப்த கனவு கலைந்தது, அரையிறுதியில் குரேஷியாவிடம் தோல்வி

உலககிண்ண கால்பந்து 2018-ல் இங்கிலாந்து அணி குரேஷியாவிடம் அரை இறுதியில் தோல்வியடைந்தது.

 

இதன் மூலம் இங்கிலாந்தின் 52 ஆண்டுகால கனவு தகர்ந்துள்ளது.
1966-ல் உலககிண்ண கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து.
அதன்பின்னர் இங்கிலாந்து உலககிண்ண தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறவில்லை.

 

 

இம்முறை மாஸ்கோவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்சுடன் இங்கிலாந்து மோதும் என இங்கிலாந்து ரசிகர்கள் நம்பினர்.

 

ஆனால் அரை இறுதி போட்டியில் ஆட்டம் முடிவதற்கு 11 நிமிடங்கள் இருக்கும் வேளையில் குரோஷியாவின் மரியோ மன்ட்ஜூகிக் அடித்த வெற்றிக்கான கோல் இங்கிலாந்தின் அரை நூற்றாண்டு கனவை அடியோடு தகர்த்தது.

 

இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் கோலை ஐந்தாவது நிமிடத்திலேயே அடித்தது.

 

முதல் பாதியில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம் இரண்டாவது பாதியில் குரோஷியாவின் பெரிசிக் 68-வது நிமிடத்தில் அடித்த கோலால் சமநிலை அடைந்தது.
இரண்டாவது பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.

 

 

இதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

 

இரண்டாவது பாதியில் இவான் பெரிசிக்கின் உதவியோடு மரியோ மன்ட்ஜூகிக் ஒரு கோல் அடித்தார்.

 

 

அதன் பிறகு குரோஷியா மேலும் கோல் போடும் முனைப்போடு துடிப்பாக ஆடியது.
கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதி முடிவில் குரோஷியா 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

 

 

இங்கிலாந்து சனிக்கிழமையன்று மூன்றாவது நான்காவது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதுகிறது.
ஞாயிற்றுகிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது பிரான்ஸ்.

இங்கிலாந்திடம் டெஸ்ட்தொடரையும் இழந்தது இலங்கை அணி!

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை 1:3 என...

Leave a Reply

Right Menu Icon