Menu

ஹிங்குராங்கொடயில் சர்வதேச விமான நிலையம்

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் ஹிங்குரக்கொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

 

 

திருகோணமலை அபிவிருத்திக்காக முன்மொழியப்பட்டுள்ள மூலோபாய திட்டத்தின் கீழ், சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கமொன்றும் அமைக்கப்படவுள்ளது.

 

இத்திட்டமானது, மாநர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

 

குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, மாநர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

 

திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாரிய அபிவிருத்தியை கருத்திற்கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியக் குழந்தைகளை அவுஸ்ரேலியர் தத்தெடுக்கலாம்

இந்தியாவில் இருந்து குழந்தைகளை...

Leave a Reply