Menu

ஜப்பான் வெள்ளத்தினால் 86 லட்சம் பேர் வெளியேற்றம்

ஜப்பானில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

ஜப்பான் நாட்டில் 1982 ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கடும் சேதம் ஏற்பட்டிருந்தது.

 

அதே போல் 26 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜப்பானில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

 

பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

 

இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள்.

 

இதுவரை 86 லட்சம் பேர் வெளியேறி உள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளதுடன், மின் கம்பங்கள் வீழ்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர், இராணுவத்தினர் 70 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 

வீதிகள், துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

ஜப்பான் வெள்ளப்பெருக்கில், இதுவரை 249 பேர் பலியாகி பலரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெள்ள நிலைமை மிக மோசமாக இருப்பதால் பிரதமர் ஷின்சோ அபே தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon