Menu

விடுதலைப்புலிகளே கதி என அரசியல் செய்யும் வடக்கு அரசியல்வாதிகள்.

விடுதலைப் புலிகள் பற்றிக் கதைக்காமல், வடக்கு அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய முடியாது என ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

தேர்தல்களின் போது, விடுதலைப் புலிகளின் பாடல்களை பிரசாரக் கூட்டங்களில் ஒலிக்கவிடுவது, அவர்களைப் பற்றிப் பேசுவது, அவர்களின் நினைவுச் சின்னங்கள் தொடர்பில் பேசியே, வடக்கு அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய முடியும் என நாமல் தெரிவித்துள்ளார்.

 

யாழில், நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நாமல் ராஜபக்ஷ, யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

 

இந்த சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்,
வடக்கு மக்களுக்கு அபிவிருத்திகளைப் பெற்றுத் தருகின்றோம். வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருகின்றோமென அவர்களை முன்னேற்றும் விதமான நடவடிக்கைகளை அரசில்வாதிகள், முன்னெடுக்காமல், வடக்கு மக்களை அபிவிருத்தி அடையாத மக்களாகவே வைத்திருக்க அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக நாமல் தெரிவித்துள்ளார்.

 

இங்குள்ள அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வடக்கில் கல்வியை மேற்கொள்ளாமல் பலர் வெளிநாடுகளில் கல்வி கற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், வடக்கில் உள்ள அரசியல் தலைவர்கள் எவருக்கும் வடக்கு மக்களை முன்னேற்ற வேண்டுமென்ற எண்ணம் துளியளவும் இல்லாது, தமது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றுவதற்கு பாடுபட்டு உழைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

 

பயங்கரவாதிகளுடன் இணைந்து தாம் எந்தக் காலத்திலும் அரசியல் செய்யவில்லை என்றும், நாட்டில் மீண்டும் யுத்தம் நடந்தால் அதில் சண்டையிட்டு நாட்டின் இளைஞர்கள், யுவதிகளே உயிரிழப்புக்களை எதிர்கொள்வார்கள் என்றும், மீண்டும் அவ்வாறானதொரு சூழல் உருவாகுவதற்கு இடமளிக்கமுடியாது என நாமல் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாட்டு மக்களுக்குப் பொய்களைக் கூறியே, ஆட்சியமைத்தனர் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon