Menu

தினேஸ் சந்திமாலுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் இலங்கை வீரர் தினேஸ் சந்திமாலுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது.

 

அத்துடன் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

பந்தை சேதப்படுத்திய விவகாரம் மற்றும் போட்டி தாமதிக்க காரணமாக செயற்பட்டதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

 

இது தொடர்பிலான தீர்ப்பு நேற்று ஐ.சி.சி.யால் வெளியிடப்பட்டது.

 

அதில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அண்மையில் மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போதே தினேஸ் சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

எனினும் பந்தை சேதப்படுத்தவில்லை என தினேஸ் சந்திமால் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பிலான விசாரணையின் தீர்ப்பை ஐ.சி.சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அலுக்கோசு பணிக்கு பெண் உட்பட ஆறு பேர் விண்ணப்பம்..!!!!

நாட்டில் மரண தண்டனை விதிப்பது தொடர்பில்...

Leave a Reply