Menu

வேறு எந்த மொழிகளுக்கு இல்லாத சிறப்பு!! தமிழின் பரம்பரை பெருமை!!

ஆங்கிலத்தில் ப்ரதர் என்றால் அண்ணனா தம்பியா என்பது தெரிவதில்லை.

அங்கிள் என்றால் சித்தப்பாவா, பெரியப்பாவா, மாமாவா என்பது தெரியவில்லை.

கஸின் என்றாலோ அவர் ஆணா பெண்ணா என்பது கூடத் தெரிவதில்லை.

உலகின் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்புக்களில் ஒன்றினை இன்று தமிழ் மொழியில் பார்ப்போம்

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண் நமது மண் என்கிறோம். அப்பு ஆச்சி ஆண்ட பூமி எனவும் நாங்கள் சொல்வதுண்டு

உறவு முறைகளில் தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள 7 தலைமுறை உறவுகளின் பெயர் தெரியுமா உங்களுக்கு
இன்று அறிந்துக்கொள்ளுங்கள்

நாம் என்ற எனது குரலும் இதனை பார்க்கின்ற நீங்கள் என்ற – உறவும் நாம் என்ற முதலாவது தலைமுறையாகும்

நமது பெற்றோர் அதாவது தந்தையும் தாயும் – இரண்டாம் தலைமுறை ஆவர்

அம்மம்மா தாத்தா அல்லது அப்பப்பா அப்பம்மா அல்லது பாட்டன் பாட்டி என்பவர்கள் மூன்றாம் தலைமுறையினர்

பூட்டன் பூட்டி – என்பவர்கள் நான்காம் தலைமுறையினர்

ஓட்டன் ஓட்டி – என்பவர்கள் ஐந்தாம் தலைமுறையின்

சேயோன் சேயோள் – என்பவர்கள் ஆறாம் தலைமுறையினர்

பரன் பரை – என்பவர்கள் தான் நமது ஏழாம் தலைமுறையினர் ஆவார்கள்

பரன்  சக பரை என்ற நமது 7 ம் தலைமுறையினர் சேர்த்து எழுதும் போது பரம்பரை ஆகின்றது

ஒரு தலைமுறையினர் என்பவர்கள் – சராசரியாக 60 வருடங்கள் என்று எடுத்துக்கொண்டால், ஏழு தலைமுறை என்பது 7 தர 60 அதாவது – 480 வருடங்கள் ஆகும்

ஈரேழு தலைமுறை என நாம் சொல்வது – 960 வருடங்கள் ஆகும்

அண்ணளவாக ஆயிரம் வருடங்கள்

ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வருகிறதல்லா தமிழ் உறவுகளே

உலகின் வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லையென்பதுவும் தமிழ் மொழியின் தனிச் சிறப்புகளில் ஒன்று அல்லவா இயலுமானால்

பகிருங்கள்

Leave a Reply

Right Menu Icon