Menu

வேடம் குறும் திரைப்படம் சமகாலத்தின் சிறந்த படைப்பு

ITaFF  2018 குறுமப்பட போட்டியில் சிறந்த நடிகருக்கான விருதினை வென்றுள்ளது

பிரான்ஸ் நாட்டில் இருந்து உருவான வேடம் குறும் திரைப்படத்தின் நாயகன் அயந்தன் சிறந்த நடிகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

கனடாவில் நடை பெற்ற குறும்படப் போட்டியில் அமலனின் இயக்கத்தில் உருவான வேடம் குறும்படமும் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

கதை திரைக்கதையில் அசத்தியுள்ளது வேடம் குறும் திரைப்படம்.
உத்தியோகப்பூர்வமாக இதுவரை வேடம் வெளியிடப்பட்டாவிட்டாலும் பல போட்டிகளுக்கு வேடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அயந்தன் சிறந்த நடிகருக்கான விருதினை வென்றுள்ளது

 

சமகாலத்தில் நிலவும் பலரும் பேச அஞ்சும் கதையினை கருவாக கொண்ட வேடம் குறும் திரைப்படத்தின் இயக்குனர் அமலன் சிறப்பாக இயக்கியுள்ளதுடன் துணிவாக மிக இலாவகமாக திரைக்கதையாக்கியுள்ளார்.

 

விடுதலைப் புலிகளின் பெரும் தொகை பணத்தினை வைத்துக்கொண்டுள்ள புலம் பெயர் பண முதலைகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவீரர் குடும்பங்களுக்கோ அல்லது முன்னாள் போராளிகளுக்கோ ஒரு சிறிய தெகையினைக்கூட செலவிடாதவர்கள் தாங்களே விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு சொத்துக்களை கையகப்படுத்தியிருக்கின்ற உண்மை நிலையினை அமலன் துணிச்சலுடன் படமாக்கியுள்ளார்
திரைக்கதையில் தொய்வுகள் இல்லாத போதும் கதைவசனத்தில் முன்னனேற்றியிருக்கலாம்.

 

எது எப்படியோ ஒரு சமகாலத்து உண்மை நிலையினை துணிவாய் படமாக்கிய இயக்குனர் அமலனை பாராட்டாமல் இருக்க முடியாது

Leave a Reply