Menu

விஜயகலாவின் பதவியை பறிக்க வேண்டும்- நவீன் திஸாநாயக்க

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை பதிவியை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே நவீன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என விஜயகலா தெரிவித்த கருத்துக்கு எதிராகவே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளர்ர.

 

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon