Menu

யாழ்ப்பாண தொண்டர் ஆசிரியர்களுக்கு மகிழ்சியான செய்தி..!!!

யாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நியமனங்கள் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தள்ளார்.

அத்துடன் 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்கள் மற்றும் தொடர்ச்சியாக மூன்றாண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களின் சேவைகளும் கவனத்திற் கொள்ளப்படவுள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிலி கொள்ள வைத்த கிளிநொச்சி.!!

தமிழ் இனத்தின் கலை பண்பாடு கலாசாரம்...

Leave a Reply

Right Menu Icon