Menu

திட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு

ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றை இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இன்றைய தினம் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியப் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கில் இடம்பெறுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பது, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவித்த இரா.சம்பந்தன் குறித்த விடையங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக தாங்கள் ஜனாதிபதியை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிலி கொள்ள வைத்த கிளிநொச்சி.!!

தமிழ் இனத்தின் கலை பண்பாடு கலாசாரம்...

Leave a Reply

Right Menu Icon