Menu

ரஷியாவின் முக்கியமான இணையதளங்களை குறிவைத்து இணையவழி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதென்கிறார்.. ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின்!!

உலக கிண்ண கால்பந்து போட்டிகளின் போது ரஷியாவின் முக்கியமான இணையதளங்களை குறிவைத்து இணையவழி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண கால்பந்து போட்டிகளின் போது ரஷியாவின் முக்கியமான 2.5 கோடி வரையிலான இணையதளங்களை குறிவைத்து இணையவழி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் விளாடிமிர் புதின் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த தாக்குதல்களை ரஸ்யா வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகவும் விளாடிமிர் புதின் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரஷியாவில் இடம்பெற்ற உலக கிண்ண கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாகவும் விளாடிமிர் புதின் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ரஷியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உயரதிகாரிககுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே விளாடிமிர் புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...

Leave a Reply

Right Menu Icon