Menu

ஒருவரை ஒருவர் கட்டி அணைத்த படியிலான மனித எலும்புக் கூடுகள் மீட்பு..!!!

மன்னாரில் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளின் போது ஒருவரை ஒருவர் கட்டி அணைத்த படியிலான மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 36ஆவது நாளாகவும் மனித எச்சங்களை மீட்பதற்கான அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த அகழ்வுப் பணிகளின் போது சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒருவரையொருவர் கட்டி அணைத்தவாறு இருப்பது போன்று அருகருகே குறித்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், பெண்களின் காப்பு போன்றதொரு தடயப் பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போதே இந்த சந்தேகத்திடமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை 40 இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளிலிருந்து தற்போது எலும்புக்கூடுகளை வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்,
அவ்வாறு வெளியேற்றப்படும் எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தில் ஒரு அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon