Menu

யாழ்ப்பாணம் கோட்டையில் அகழ்வு பணியின் போது மனித எலும்பு எச்சங்கள் மீட்பு..!!!

யாழ்.கோட்டையின் உட்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சம் போர்த்துக்கீசர் காலத்தினுடையதாக இருக்கலாம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.கோட்டையின் உட்பகுதியினுள் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளின் போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதியானது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தின் தலைநகரமாக விளங்கியமைக்கான ஆதராங்கள் சில கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

கோட்டை அமைந்துள்ள பகுதிகளில் கடந்தவருடம் ஸ்கானர் மூலம் ஆய்வுகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், கோட்டை அமைந்துள்ள பகுதிகளின் கீழ் போர்த்துக்கீசர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அமெரிக்க பல்கலைகழகம் , யாழ். பல்கலைகழகம் , தொல்லியல் திணைக்களம் , மத்திய கலர்சார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாகவே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தொல்லியல் திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் அகழ்வுப் பணியின் போது மீட்கப்பட்ட மனித எச்சம் போத்துக்கீசர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்கள் என நம்புவதாக தொல்லியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளதர்.

எவ்வாறு எனினும் ஆய்வுப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், எதனையும் உத்தியோகபூர்வமாக கூற முடியாது என்றும், தொல்லியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon