Menu

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.!!

கடந்த 500 நாட்களாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று தங்களது தொடர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

எனினும், ஒவ்வொரு மாதமும் ஒரு தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த உத்தேசித்து இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் பிரதிநிதி ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

தமது போராட்டம் 500ஆவது தினத்தை எட்டியதை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபித்து தருமாறு அரசாங்கத்தினை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தை கடந்து இன்று 500 நாட்களை எட்டியுள்ளது.

தமது உயிருக்கும் மேலானவர்களின் வருகைக்காக 500 நாட்களாக கண்ணீருடன் வீதியில் காத்திருந்தும் இதுவரை ஏமாற்றம் மாத்திரமே கிடைத்துள்ளதாகவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது
அரசே எம்மீது உனக்கு கவனமில்லையா?,
சர்வதேசமே எம்மீது இரக்கமில்லையா?,
உறவுகளை தேடி அலைகின்றோம் எங்கே எம் உறவுகள்?
விசாரணை என்று எம்மை ஏமாற்றாதே எனத் தெரிவித்து,

உறவுகளை தொலைத்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon