Menu

பிரேரணையை அமெரிக்கா தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியும்!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள போதும், இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இஷ்ரேல் விடயத்தில் பாரபட்சமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமகள் பேரவையில் இருந்து அமெரிக்கா அண்மையில் விலகியுள்ளமை யாவரும் அறிந்ததே

அடுத்து இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் கேள்வி எழுந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த பிரேரணையை மீளப்பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பாளர் என்ற ரீதியில் அமெரிக்கா இந்த பிரேரணையை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியும் என்றும் மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், அதற்கு பதிலாக கடந்த வாரம் ஐஸ்லாந்து இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon