Menu

இலங்கையில் முகப்புத்தக பயன்பாட்டாளர்களுக்கு புதிய சிக்கல்…!!!

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இன முரண்பாடுகளைக் தோற்றுவிக்கக்கூடிய பதிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை முகப்புத்தக நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், முகப்புத்தக நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளர் தெஸ்ஸா லியோன்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முகப்புத்தகத்தில் பதியப்படுகின்ற சில தகவல்களால் வெளிசமூகத்தில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் அமைகின்றதாகவும் தெஸ்ஸா லியோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இதனால் முகப்புத்த நிறுவனத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெஸ்ஸா லியோன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கையில் கண்டி உள்ளிட்ட சில இடங்களில் பதிவான வன்முறைகளின் பின்னணியில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்

பகிரப்பட்ட பதிவுகளும் காரணமாக அமைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெஸ்ஸா லியோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை அடுத்து இலங்கைக்கு விஜயம் செய்த முகப்புத்தக நிறுவனத்தின் பிரதானிகள், முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான, பதிவுகளை கட்டுப்படுத்துவதற்கு இணங்கியதுடன், அதற்கான வேலைத்திட்டத்தை அமுலாக்குவதாகவும் உறுதியளித்தனர்.

எனினும் இவ்வாறான பதிவுகளை கட்டுப்படுத்துவது மாத்திரம் போதாது என்று தெரிவித்துள்ள தெஸ்ஸா லியோன்ஸ் அவ்வாறான பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தெரிவித்துள்ளார்.

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...

Leave a Reply

Right Menu Icon