Menu

ஒன்ராறியோ நெடுஞ்சாலை 401 இல் விபத்து மூவர் படுகாயம்..!!!!

ஒன்ராறியோவில் நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ரக்ரக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதுடன் வீதியால் பயனித்த வேறு வாகனங்களுடனும் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது 40 வயதுடைய நபர் ஒருவர் வாகனத்தால் இழுத்து செல்லப்பட்டிருந்ததுடன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இதில் 2 ஆவது மற்றும் 3 ஆவது நபர்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இவர்கள் தொடர்பில் விபரங்களை எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரொறான்ரோவில் கத்தி குத்து ஒருவர் காயம்.!!

ரொறான்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து...

Leave a Reply

Right Menu Icon