Menu

ரொறன்ரோவில் திட்டமிடப்பட்டு விசமிகளால் தீவிபத்து பொலிசார் விசாரணை!!!

ரொறன்ரோ பழைய நகர மண்டபத்தில் வேண்டும் என்றே விசமிகளால் தீவிபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பழைய நகர மண்டபத்தின் தென்கிழக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இந்த தீப்பரவல் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தீயணைப்பு படையினர் தீப்பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் இந்த தீப்பரவல் காரணமாக கட்டிடத்திற்கு சுமார் ஒரு லட்சம் டொலர்கள் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண தீயணைப்பு அதிகாரிகளும், மற்றும் ரொறன்ரோ தீயணைப்பு படை அதிகாரிகளும் மேற்கொண்ட ஆய்வுகளில், குறித்த தீ விபத்தானது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்திற்கு காரணமான சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனேடியர்களை விட அதிக வருமானம் பெறும் கனடா அகதிகள்.!!

கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில்...

Leave a Reply

Right Menu Icon