Menu

பிரமுகர்களின் வாகனங்களில், பதிவு எண் பலகை அவசியம் – நீதிமன்று உத்தரவு

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் ஆகியோர் பயணிக்கும் கார்களில் கட்டாயமாக பதிவு எண் பலகை பொருத்தப்பட வேண்டும் என்று டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நாட்டின் மிக உயர்ந்த பதவிகளை வகிப்பவர்களின் வாகனங்களில் வாகனப் பதிவு எண் பலகை இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

வாகனங்களில் பதிவு எண் இல்லாமல் இருப்பது மோட்டார் வாகனச் சட்டத்தின் படி விதிமுறை மீறல் என்றும், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிப்பவர்களின் வாகனங்களில் பதிவு எண் இருக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அத்துடன், பதிவு எண் இல்லாமல் இயங்கும் இதுபோன்ற வாகனங்களுக்கு எதிராக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது.

 

அதை விசாரித்த நீதிமன்றம் அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் இருப்பது கட்டாயம் என்று உத்தரவிட்டது.

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிமுக்கிய நபர்களின் கார்களில் சுழல்விளக்கை பொருத்த தடை விதித்திருந்தது.

 

அத்துடன், அதிமுக்கிய நபர்களின் கார்களில் பதிவு எண்ணுக்கு பதிலாக சிங்க முகங்கள் கொண்ட அரசு இலச்சினை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியக் குழந்தைகளை அவுஸ்ரேலியர் தத்தெடுக்கலாம்

இந்தியாவில் இருந்து குழந்தைகளை...

Leave a Reply