Menu

மகிந்த மீண்டும் வந்தால் தமிழர்களுக்கு விடிவில்லை !!!

மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வினை எதிர்பார்க்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே எஸ்.வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தன்னிடம் உள்ள குறைபாடுகளைத் திருத்திச் செல்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்காவிட்டால் அது ஆட்சிக்குப் பெரும் சரிவினை ஏற்படுத்தும் நிலையை உருவாகும் என்றும் எஸ்.வியாழேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் பலவீனங்களை சுட்டி காட்டிக்கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற நினைப்போருக்கு அந்த சந்தர்ப்பத்தினை வழங்கூடாது என்றும் எஸ்.வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு இதுவரையில் தீர்வுகள் வழங்கப்படா விட்டாலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் நிலை காணப்படுவதாகவும் எஸ்.வியாழேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ஷ குழுவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் பேசும் மக்கள் எந்தவொரு தீர்வுத் திட்டத்தினையும் எதிர்பார்க்க முடியாது என்பதுடன், நிலைமை மேலும் மோசமடையும் என்றும் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் குரல்கொடுப்பது இல்லை என்றும் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon