Menu

யாழில் தொடரும் வன்முறைகள் மீண்டும் யாழில் தக்குதல்..! அச்சத்தில் யாழ் மக்கள்.!!!!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், அத்துடன் வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடி என்பவற்றை உடைத்து விட்டு பெற்றோல் குண்டை வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுமார் எட்டு பேர் வரையிலான குழுவொன்று ஆயுதங்களுடன் வண்ணார் பண்ணை, தாமரை வீதியிலுள்ள வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிடதுடன் வீட்டிற்குள் பெற்றோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon