Menu

யாழ்ப்பாணத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு பணிப்புரை

யாழ்ப்பாணத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரீசன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்க்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான யாழ். மாவட்டத்திற்கான சமுர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

யாழ். மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.மகேஸ்வரன் தலைமையில் யாழ். நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பி.ஹரீசன் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டிருந்தார்.

இந்த கலந்துரையாடலின் போதே அமைச்சர் பி.ஹரீசன் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பயானாளிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் உத்தியோகத்தர்களை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான தீர்வுகளையும் முன்வைத்துள்ளார்.

அத்துடன் நிலுவையிலுள்ள பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு அதிகாரிகளை பணித்த அமைச்சர்,
கிராம மட்டங்களில் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள உதவித் திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, சமுர்த்தி திணைக்களத்தின் முத்திரை குலுக்கல் வீட்டுத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து பேருக்கு தலா இரண்டு லட்சம் வீதம் நிதியுதவி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், அருணை திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பத்து பேருக்கு தொழில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon