Menu

கனடாவில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டம்..!!!

கனடாவில் அண்மை காலமாக அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டத்திற்கு பாரிய நிதி தேவைப்படுவதாக நகர சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே குறித்த திட்டத்திற்கான 44 மில்லியன் டொலர்களை மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களிடம் கோரியுள்ளதாகவும் நகர சபை அறிவித்துள்ளது.

அத்துடன் ரொறான்ரோ முதல்வரான ஜோன் டோரி மற்றும் பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சாண்டர்ஸ் ஆகியோரால் குறித்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டமானது ஐந்து ஆண்டுகள் கொண்டதாக அமையவுள்ளதாகவும் நடைமுறைப்படுத்தபடவுள்ள திட்டத்தின் ஊடாக, அதிகரித்து வரும் துப்பாக்கி சுட்டு சம்பவங்கள் தொடர்பான வன்முறைகளை குறைக்க முடியுமென நகர சபையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

44 மில்லியன் டொலர்கள் கொண்ட இந்த புதிய திட்டத்தில், 30.3 மில்லியன் டொலர்களை சமூக நலத் திட்டங்கள், பிற இடர்பாடுகள் மற்றும் ஆபத்தில் உள்ள இளைஞர்களுக்கு உதவுதல் போன்றவற்றிற்காக செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon