Menu

நாட்டின் தேசிய வளங்களை விற்றபின் சீனாவிடம் கையேந்தும் நல்லாட்சி..!!

நாட்டின் தேசிய வளங்களை அமெரிக்க மற்றும் இந்திய உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு நாடு தற்போது சீனாவிடம் கையேந்திக் கொண்டிருப்பதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பேராசிரியருமான திஸ்ஸவிதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்தள விமான நிலையம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் என்பவற்றை அரசு இந்தியாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் திஸ்ஸவிதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்த திஸ்ஸவிதாரண
இந்த மூன்று வருடங்களில் நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கும் தனியார் கம்பனிகளுக்கும் விற்பனை செய்ததே இந்த அரசாங்கத்தின் சாதனை என்றும் விமர்சித்துள்ளார்.

நாட்டின் பெரும்பாலான தேசிய வளங்களை விற்பனை செய்து முடித்து விட்டார்கள் என தெரிவித்துள்ள திஸ்ஸவிதாரண
இனி விற்பனை செய்வதற்கு நாட்டில் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் எஞ்சியிருக்கும் ஒன்றரை வருட ஆட்சி காலத்தில் முழு இலங்கையை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்து விடும் என்றும் திஸ்ஸவிதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மக்களின் சுதந்திரத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் திஸ்ஸவிதாரண அச்சம் வெளியிட்டுள்ளார்.

எனவே இவ்வாறு தொடர்ச்சியாக தேசிய வளங்கள் விற்கப்படுகின்றமையை அனுமதிக்க முடியாது என தெரிவித்த திஸ்ஸவிதாரண
இது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அடுத்த மாதம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் திஸ்ஸவிதாரண மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon