Menu

தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுகின்றோம் என்கிறார்.. பிரதமர் !!!

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்திருந்த பிரதமர், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க  தமிழ் மக்களின் நலன் சார்ந்து அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள மக்களிற்காக வீட்டுத்திட்டங்களை வழங்கவுள்ளதாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க அதனைவிடவும் போக்குவரத்து வசதிக்காக பல வீதிகளை அமைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பூநகரி, மன்னார் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிளில் நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய சுற்றுலா மையங்களை உருவாக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனிற்காக மேலும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon