Menu

எதிர்ப்புகளை கண்டு பின்வாங்கும் அரசாங்கத்தால் மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது..!!!

எதிர்ப்புகளுக்கு அஞ்சி தீர்மானங்களிலிருந்து பின்வாங்கும் நல்லாட்சி அரசாங்கத்தில், மரண தண்டனை நிறைவேற்றம் என்பது சாத்தியமற்றது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பாக நாட்டில் தற்போது பேச்சுக்கள் எழுந்துள்ளதாக தெரிவித்த ஜீ.எல்.பீரிஸ்

ஆனால், இது ஒருபோதும் நடைமுறைக்கு வராது என்பதை தாம் தற்போதே உறுதியாகக் கூறிக்கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடையே தற்போது காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது தத்தளிக்கு நல்லாட்சி அரசாங்கம், அதிலிருந்து மக்களைத் திசைத்திருப்பி, குறுகிய

காலத்துக்கு அவர்களின் அபிப்பிரயாயங்களைப் பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மரண தண்டனை நடைமுறைப்படுமாயின் ஜி.எஸ்.டி. வரிச்சலுகையை மீண்டும் இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

தனது தீர்மானத்துக்கு எதிர்ப்புக்கள் வரும் போது அதிலிருந்து பின்வாங்கும் போக்கையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்றுவார் என்பதனை ஒருபோதும் நம்ப முடியாது’ என்றும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon