Menu

தமிழர்களின் தீர்வில் தமிழ்நாடு தலையிட முடியாது விக்கி..!!!

இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது என தான் கருதுவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே முதலமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்

தொடர்பான அறிக்கையை ஜெனீவாவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை சமர்ப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கை விவகாரம் தொடர்பான தென்னிந்திய கட்சிகளின் செல்வாக்கு குறித்து தெரிவித்த முதலமைச்சர், தமிழ் நாட்டின் கட்சிகளுக்குள்ளேயே நிறைய மோதல்கள் காணப்படுகின்ற நிலையில் இலங்கையின் பிரச்சினையில் தமிழ்நாடு தலையிடுவது பொருத்தமற்றது எனத் தெரிவித்துள்ளர்ர.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கையின் பிரச்சினை தொடர்பாக கவனம் கொண்டுள்ளமையால் இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்கள் குறையாது என்று எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண முதலமைசச்ர் சி.வி விக்னேஸ்வரன், தெரிவித்தார்.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேக...

Leave a Reply

Right Menu Icon