Menu

ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்.!!!

தனிமனித ஜனநாயகம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை முறையாக பயன்படுத்திக் கொண்டு சிறந்த அரசியல் கலாசாரத்தையும் ஆட்சிமுறைமையினையும் தோற்றுவிக்க வழிவகுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் களுகங்கை நீர்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் அனைத்து ஜனநாயகங்களும் உறுதிப்படுத்தப்பட்டு சுயாதீனமாக செயற்படக் கூடிய நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றும், ஊடகங்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் கருவியாக செயற்பட வேண்டும் என்ற காரணத்தினால் ஊடக சுதந்திரம் பலப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இன்று எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை அடைய முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி தோற்றுவிக்கப்பட்ட ஜனநாயகம் சிலரது முறையற்ற செயற்பாட்டின் காரணமாக இல்லாது போகும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே ஊடகத்தின் சுதந்திரத்தினை முறையாக பயன்படுத்தி ஏற்படக் கூடிய ஆபத்துக்களை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்று என்ன செய்தது என்று சிலர் குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு குற்றம் சாட்டுவதாக தெரிவித்த மைத்திரி, கடந்த அரசாங்கம் செய்த எதனையும் தேசிய அரசாங்கம் செய்யவில்லை என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான அபிவிருத்தி மற்றும் ஜனநாயக ஒருமைப்பாடு போன்ற விடயங்களை தேசிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்ற விடயமே பாரிய வெற்றியாக காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon