Menu

ஜுலைக் கலவரத்தை நினைவுகூர்ந்த கனடியப் பிரதமர்

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜுலைக் கலவரத்தில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர்களை கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ நினைவு கூர்ந்துள்ளார்.

 

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கனேடிய பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூருவதாக கனடியப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் கனடாவினால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் கீழ் சுமார் 1800 இலங்கை தமிழர்கள் கனடாவில் பாதுகாப்பை பெற்றதாக ஜஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தநிலையில் இலங்கைத் தமிழர்கள், கனடாவுக்கு பாரிய பணிகளை செய்துள்ளனர் என்றும், எனினும் இலங்கையில் போர் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த போதும் இன்னும் நல்லிணக்கம் ஏற்படவில்லை என கனடியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon