Menu

பழைய குருடி கதவை திறவடி என்ற கதையாகிவிட்டது பொன்சேகாவின் செபற்பாடு.!!

நாட்டில் பிரபல்யமான குற்றவாளிகளுக்கும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்திய செய்தியை, நீக்க வேண்டும் என்று பிரதேச அபிவிருத்தி தொ டர்பான அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நடந்து கொண்ட விதமானது,

ஊடக நிறுவனமொன்றின் சுகந்திர செயற்பாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட அவசியமற்ற தலையீடு என சுதந்திர ஊடக இயக்கம் வண்மையாகக் கண்டித்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஏனைய ஊடகங்கள் ஊடாக குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார்.

தமது ஊடக செயற்பாடுகள் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் அவற்றை சரிசெய்வது ஊடக நிறுவனங்களின் பொறுப்பாகும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தவறான செய்தியினை சுட்டிக்காட்டி, திருத்தம் கோருவதற்கு சகலருக்கும் உரிமையுள்ளதாகவும் சுதந்திர ஊடக இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அவ்வாறிருக்கையில் அதனை நிராகரித்து ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதுடன் அச்சுறுத்தல் விடுப்பதும் நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு மட்டுமல்லாது ஜனநாயகத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் செயல் என்று சுதந்திர ஊடக இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon