Menu

சர்வமத குழுக்களின் பிரதிநிதித்துவ தேசிய மாநாடு இடம்பெற்றுள்ளது.!!

சர்வமத குழுக்களின் பிரதிநிதித்துவ தேசிய மாநாடு இன்றைய தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

தேசிய சமாதானப் பேரவையின் வழிகாட்டலின் கீழ், நாட்டின் 16 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட சர்வமத குழுக்களுடன் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.

அத்துடன் நாட்டில் உள்ள மாவட்டங்களில் காணப்படுகின்ற பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பான பிரேரணைகளை 16 மாவட்டங்களை சேர்ந்த குழுவினர் சமர்பித்துள்ளனர்.

குறிப்பாக நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு பாடசாலைக் கல்வியில் சீரமைப்புக்களை தயாரித்தலும் அமுலாக்கலும், மற்றும் நல்லிணக்கம், சகவாழ்வு ஆகிய துறைகளில் மனப்பாங்குகளை மேம்படுத்தக்கூடிய வகையில் அறநெறிப் பாடசாலைகளில் கல்வித்திட்டத்தை மறுசீரமைத்தல் போன்ற முக்கியமான பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யுத்தம் காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களின் மனக் காயங்களைக் குணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்,

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய ஊடகக் கொள்கையைத் தயாரித்தல்,

அரசின் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான பொது நிகழ்ச்சித்திட்டத்தை வலுவூட்டல்,

சமூகப் பாதுகாப்பு, மற்றும் பன்மைத்துவக் கலாச்சாரத்தை மேம்படுத்தல்,

மனிதாபிமானம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புதல் போன்ற நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பிரேரணைகளும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon