Menu

இங்கிலாந்து அணிக்கு எதிரான சவாலுக்கு இந்திய அணி தயார்.. ரஹானே!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என இந்திய அணியின் துணை தலைவரான ரஹானே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நாளை ஆரம்பமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாளையதினம் ஆரம்பமாக உள்ள போட்டி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ரஹானே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான சவாலுக்கு இந்திய அணி நன்றாக தயாராகியுள்ளதாகவும் ரஹானே மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போட்டி முடிவுகள் குறித்து அதிகம் கவலைப்பட்டு நெருக்கடிக்கு ஆளாவதை விடுத்து சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் இந்திய அணி அதிகம் கவனம் செலுத்தும் என்றும் ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் ரஹானே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ரி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் சிறப்பாக குல்தீப் யாதவ் செயற்பட்டு இருந்துள்ளதாகவும் ரஹானே சுட்டிக்காட்டியுள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon