Menu

மீண்டும் வடக்கு பொலிசாரின் விடுமுறைகள் இரத்து

யாழில், வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை பொலிஸாருக்கு காலவறையறையற்ற விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறையே இவ்வாறு காலவறையற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழு, மற்றும் கொள்ளையர்களின் அட்டகாசம் அரங்கேறி வருகினற்ன.

 

இவ்வாறான வன்முறையில் ஈடுபடும் குழுவை கைது செய்வதற்காகவே, விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

 

அத்துடன், விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள், மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துகள் என்பன பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த திடீர் அறிவிப்பினை சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ளார்.

 

யாழ்ப்பாணம் கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் வன்முறைக் குழுவினரை விரைவாக கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறும் பகுதிகளில் ஒன்று கூடும் இளைஞர்கள், மற்றும் வீதியில் அநாவசியமாக நடமாடித்திரிபவர்களையும் கைது செய்யுமாறு பொலிசாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon