Menu

கொழும்பு டிலாசால் கல்லூரியின் நூலகத்தை புனரமைக்க நடவடிக்கை !!! சண்.குகவரதன்!!

கொழும்பு-15 டிலாசால் கல்லூரியில் கடந்த ஓக்டோபர் மாதமளவில் பாடசாலையின் நூலகத்திற்கு மேலே மரம் ஒன்று கூரையின் மீது இடிந்து விழுந்த நிலையில் சேதமடைந்த நிலையில் காணப்பட்டிருந்தது.

பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாடசாலையாக இருந்தபோதும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் கண்டுகொள்ளாத நிலையில் மேல் மாகாணசபை உறுப்பினரும் பொறியியலாளருமான சண்.குகவரதன் இதனை கருத்தில் கொண்டு பாடசாலையின் நூலகத்தினை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

குறித்த பாடசாலையின் பெற்றோர்கள் சண்.குகவரதனின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து உடனடியாக பாடசாலைக்கு நேரில் விஜயம் செய்திருந்ததுடன் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் மாகாண திட்டமிடல் பணிப்பாளரான திரு.ஹெட்டியார்ச்சியுடன் தொடர்புகொண்டு அதற்கான உத்தரவை பிறப்பித்ததுடன் , கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச அவர்கள் அதற்கான நிதியை ஒதுக்கி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை ஆரம்பித்தவுடன்,கூரை வேலைகளை ஆரம்பிப்பதாகவும் மாகாண திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஹெட்டியார்ச்சி சண்.குகவரதனிடம்; உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...

Leave a Reply

Right Menu Icon