Menu

புத்தரும் இந்து தான் எனவே வடக்கில் விகாரைகளை கட்டலாம்.!!!!

புத்தரும் விஷ்ணுவின் அவதாரமே. இதனால் வடக்கில் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்த பணகல உபதிஸ்ஸ தேரர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இந்துக்களா? கிறீஸ்தவர்களா? பௌத்தர்களா? என கேள்வி எழுப்பிய உபதிஸ்ஸ தேரர்

இங்கு பௌத்தரும் ஒரு இந்து தான் என்றும் கிருஷ்ண பகவானின் எட்டாவது அவதாரம் தான் புத்த பகவான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்தர்கள் வேற்றுகிரக மதத்தவர்கள் அல்ல என தெரிவித்த உபதிஸ்ஸ தேரர் அவர்கள் உங்கள் சொந்த மதத்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த பணகல உபதிஸ்ஸ தேரர் நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரை சந்தித்து மத வேற்றுமைகளை களைவதன் ஊடாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

தொடர்ந்து மாலை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து, யாழ். மாவட்டத்திலும், குறிப்பாக வடமாகாணத்திலும் மக்களுக்குள்ள தேவைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon