Menu

விஸ்பரூபம் 2 வெளியாவதில் சிக்கல்

கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம்-2 திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் மூன்று வருடத்திற்குப் பின்னர், வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி, பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

 

பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில்,
‘மர்மயோகி’ திரைப்படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் 100 கோடி செலவில் தயாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் நிறுவனத்துடன் தங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதற்கு சம்மதம் தெரிவித்து அதற்கு முன்பணமாக 4 கோடி கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனினும் குறித்த பணத்தைப் பெற்றுக் கொண்டு மர்மயோகி படத்தின் வேலைகளை செய்யாமல் கமல்ஹாசன், உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை எடுத்திருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையில், ‘விஸ்வரூபம்-2’ என்ற படத்தை கமல் தயாரித்து நடித்துள்ளதுடன் வரும் 10 ஆம் திகதி வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது என மனுவில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

 

எனவே, மர்மயோகி படத்திற்காக தங்களிடம் பெற்றுக் கொண்ட 4 கோடியை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடி வழங்குவதற்கு, கமல்ஹாசனுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆதலால், விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க வேண்டும். என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கமல்ஹாசனுக்கு அறிவித்தல், அனுப்பி பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மகேஷ் பாபு திரையரங்கை துவக்கி வைக்கும் ரஜினி!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனான...

Leave a Reply

Right Menu Icon