Menu

ஷிம்பாப்பே ஜனாதிபதியாக நங்கக்வா தெரிவு

ஷிம்பாப்பே ஜனாதிபதி தேர்தலில், 50.8 சதவீத வாக்குகளை பெற்ற நங்கக்வா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளாhர்.

 

ஆப்பிரிக்க நாடான ஷிம்பாப்பேயில், 37 ஆண்டு காலமாக ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த வருடம் புரட்சி இடம்பெற்றது.

 

இதனால் முகாபேயின் பதவி பறிக்கப்படலாம் என்ற நிலையில் தானாகவே முன்வந்து கடந்த நவம்பர் மாத இறுதியில் ரொபர்ட் முகாபே பதவி விலகியிருந்தார்.

 

முகாபே பதவி விலகியதைத் தொடர்ந்து எம்மர்சன் நங்கக்வா என்பவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 

அதன் பின்னர் ஷிம்பாபேயின் முதன்முறையாக கடந்த 30 ஆம் திகதி பொது தேர்தல் நடத்தப்பட்டது.

 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது சில வன்முறைகள் இடம்பெற்றன.

 

அதன் பின்னர்,பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டன.

 

இதில், ஜனாதிபதி எம்மர்சன் நங்கக்வாவின் ஆளும் ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்று உள்ளது.

 

ஜானு-பி.எப். கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குவதுடன், 50.8 சதவீத வாக்குகளை பெற்ற நங்கக்வா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon