Menu

தேசிய அரசாங்கத்தை உருவாக்கிய ரணிலை புறக்கணிக்க முடியாது..!! மாவை.சேனாதிராஜா!!

அரசியல் தீர்வு விடையத்தில் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றிணைந்தே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வொன்றை காண வேண்டும் என்றும் மாவை.சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் தீர்வு வழங்குவதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்ததாகவும் மாவை.சேனாதிராஜா குறிப்பட்டுள்ளார்.

எனவே வழங்கிய வாக்குறுதியை ஒரு பொழுதும் மறக்க முடியாது என்றும் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் தீர்வினை வழங்க முன்வந்தாலும் கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் காரணமாக அரசியல் தீர்வு ஒரு தொடர்கதையாகவே காணப்படுவதாகவும் மாவை.சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தவுடன் ஒன்றிணைந்தால் மாத்திரமே அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றமையானது நடைமுறைக்கு பொருத்தமற்றதாகவே காணப்படுவதாகவும் மாவை.சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கத்தை தோற்றுவிக்க முக்கிய இடம் வகித்துள்ளதாக தெரிவித்த மாவை.சேனாதிராஜா

தமிழ் மக்களும் அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் என்ற காரணத்தினாலே தேசிய அரசாங்கத்தை ரணில் தோற்றுவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரசியல் தீர்வு விடயத்தில் ஒருவரை ஒருவர் கைக்காட்டி விட்டு விலகிவிட முடியாது என குறிப்பிட்ட மாவை.சேனாதிராஜா

அனைவரும் ஒன்றினைந்தே புதிய அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon