Menu

நிறைவேறாத அரசியல் தீர்வை காரணம் காட்டி வடக்கு மக்களை ஏமாற்றும் த.தே.கூ.!!!

தமிழ்தேசிய கூட்டமைப்பானது நிறைவேறாத அரசியல் தீர்வை காரணம் காட்டி வடக்கு மாகாண மக்களை ஏமாற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொய்யான கருத்துக்களை தொடர்ந்தும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு விடயத்திற்கு மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துவதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எதிர்கட்சி தலைவரான இரா.சம்பந்தன் நாட்டில் உள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர் கட்சி தலைவர் என்ற விடயத்தை ஒரு போதும் உறுதிப்படுத்தியதில்லை என்றும் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் பொய்யான கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க பொது எதிரணி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ஆனால் அரசியல்தீர்வு தான் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திபடுத்தும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...

Leave a Reply

Right Menu Icon