Menu

மோடி தலமையிலான அரசு மீது மக்களுக்கு வெறுப்பு .!!ராகுல் காந்தி..!!!!

இந்தியாவில் ஊழல், பிரிவினை வாதம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி என்பன அதி உச்ச நிலையில் உள்ளதாக கொங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

கொங்கிரஸ்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் உரையாற்றும் போதே ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி தலமையிலான மத்திய அரசாங்கத்தில் ஊழல், பிரிவினை வாதம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி என்பன அதி உச்ச நிலையில் காணப்படுவதாகவும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்களிடம் கோபமான நிலை காணப்படுவதாகவும் ராகுல் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே தனது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக உழைத்து மக்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் ஜனநாயாகம் மற்றும் சமூக நீதி பேசும் கட்சிகளுக்கும், சர்வாதிகாரம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வினை ஊக்குவிக்கும் கட்சிகளுக்கு இடையேயான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டிய பாரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் அரசியலமைப்பின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் வெறுப்பு, பிரிவினை வாதம் மற்றும் வன்முறை சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மேலும் தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் பாடசாலை கல்லூரிகளுக்கு 28 வரை விடுமுறை

கேரளாவில் தொடரும் கன மழை காரணமாக ஓகஸ்ட் 28...

Leave a Reply