Menu

கலைஞர் கோடான கோடி மக்களின் இதயத்தில் வாழ்வார் மோடி புகழாஞ்சலி!!

கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜாஜி மண்டபத்தில்; வைக்கபட்டு உள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் பிரமுகர்களும், திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

பிரதமர் மோடி சென்னை வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின் ,கனிமொழி உள்பட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இது குறித்த புகைபடத்தை டுவிட்டரில் வெளியிட்டு தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன்.

கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என பிரதமர் கூறி உள்ளார்.

 

ஆன்லைனில் சிவகாசி பட்டாசு: 1000 வாலா வெறும் 6 ரூபாய்க்கு..?

உங்கள் சென்னை கிராக்கர்ஸ் ஆன்லைன் (Chennai Crackers...

Leave a Reply

Right Menu Icon