Menu

புங்குடுதீவு மாணவி வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி ஒத்திவைப்பு.!!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் மேன்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் 9 சந்தேக நபர்கள் குற்றம் சுமத்தப்பட்டு, 3 தமிழ் பேசும் மேல்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதாய தீப்பாயத்தின் ஊடாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைகளில் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதுடன், 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த ஏழு பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டை மேற்கொண்டிருந்தனர்.

இந்த மனுவை 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் பரிசீலனைக்கு எடுத்ததுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி வரையில் அதனை ஒத்திவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon